பெருமாளை பார்த்ததுமே நடுங்கிய மீனா.. பெத்த மகளாக நினைச்சிருக்க கூடாதா.. சென்னையில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் நள்ளிரவு நடந்துள்ள இந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கி போட்டிருக்கிறது. பெத்த மகளை போல பார்த்துக்கொள்ள வேண்டிய மாமனாரே, கணவனை இழந்து தவித்த இளம் மருமகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனால் நடந்த கொடூர சம்பவமும் தலைநகரில் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.. என்னதான நடந்தது பல்லாவரத்தில்?

சென்னை தாம்பரம் அருகே அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான மீனா. இவருடைய கணவர் மணிகண்டனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. எவ்வளவு சிகிச்சைகள் தந்தும் பலனில்லாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம்.

Chennai Pallavaram crime

மீனா - பெருமாள்

மீனாவுக்கு 8 வயதில் ஈஸ்வரி என்ற மகள் உள்ளார்.. கணவனை இழந்த நிலையில், பெண் குழந்தையை எப்படி வளர்க்க போகிறோமோ என்ற கலக்கத்திலும், கணவனை இழந்த துக்கத்திலும் தவித்து வந்துள்ளார்.. எனினும் மாமனார் பெருமாள் (58) மற்றும் மாமியார் பத்மா (54) ஆகியோருடன் ஒரே வீட்டில்தான் மீனா வசித்து வந்தார்.

ஆனால், மருமகள் மீனாவுக்கு பெருமாள் அடிக்கடி பாலியல் ரீதியாக அத்துமீறித் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.. கணவனை இழந்து ஆதரவற்று நிற்கும் தனக்கு, மாமனாரே இப்படி ஒரு கொடுமையைச் செய்வதைக் கண்டு மீனா நிலைகுலைந்து போனார்.. இதுகுறித்து தன்னுடைய மாமியார் பத்மாவிடம் கண்ணீரோடு முறையிட்டுள்ளார்.

மாமியார் - மாமனார்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமியார், உடனே தன் கணவரிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. அப்போது மாமனார், மாமியாருக்கு இடையே வீட்டில் பயங்கர தகராறு வெடித்துள்ளது.. மருமகளிடம் தன்னுடைய கணவர் தவறாக நடந்து கொண்டதால் மனம் நொந்து போனார் மாமியார்.. அத்துடன் கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய அம்மா வீட்டிற்கும் கிளம்பி சென்றுவிட்டார்.

இப்போது, மாமியார் வீட்டில் இல்லாதது பெருமாளுக்கு இன்னும் சாதகமாக போய்விட்டது. நேற்று நள்ளிரவிலும் தன்னுடைய வக்கிர புத்தியை காட்ட பெருமாள் துணிந்துள்ளார்.. இதனால் பயந்துபோன மீனா தன்னுடைய மகள் மற்றும் உறவினர் குழந்தையுடன், ரூம் கதவைப் பூட்டிக்கொண்டு பயத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போதும் பெருமாள் விடவில்லை..

சென்னை பல்லாவரம் கிரைம்

நள்ளிரவில் அங்கு வந்த பெருமாள், கதவை பலமாக உடைத்து மீனாவின் ரூமுக்குள் நுழைந்து பலவந்தமாகப் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.. பெருமாளின் பிடியில் இருந்து விடுபட மீனா கடுமையாகப் போராடியும் முடியவில்லை.. அதனால் அதே ரூமில் கிடந்த அறிவாள்மனையை கையில் எடுத்த மீனா, பெருமாளின் கழுத்தில் ஓங்கி வெட்டினார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

நள்ளிரவில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷ்னுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெருமாளின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாமனாரைக் கொலை செய்த மீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் இறந்த 3 மாதங்களில், தற்காப்புக்காக பெண் எடுத்த இப்படிப்பட்ட பயங்கரமான முடிவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+