ரஜினிகாந்த் வீடு சென்று வாய் விட்டு கேட்ட பாக்யராஜ்.. டி.ராஜேந்தருக்கும் கை விரித்த சூப்பர் ஸ்டார்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள பெரிய தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர, நலிவடைந்த சக கலைஞர்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்து உதவவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. அத்துடன் பாக்யராஜ், டி.ராஜேந்தர் இருவரை பற்றியும் அந்த பேட்டியில் விரிவாகவே தெரிவித்துள்ள பாலாஜி பிரபு. ஒருவர் மறைந்த பின்பு அவரைப் புகழும் சினிமா துறையினர், அவர் வாழும் காலத்தில் நலிவடையும் போது ஏன் உதவ முன்வருவதில்லை?" என்றும் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.
Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு,. "இயக்குநர் பாக்கியராஜ் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்ததால், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். அந்த காலகட்டத்தில் அவர் "வேட்டிய மடிச்சு கட்டு" என்ற படத்தை தயாரித்தார்.

ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்ற பாக்யராஜ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்தப் படத்தில் கேமியோ ரோலில் (சிறப்புத் தோற்றம்) நடித்தால், அவரது மார்க்கெட் காரணமாகப் படம் நல்ல விலைக்கு வியாபாரமாகும், படத்துக்கும் ஒரு ஹைப் கிடைக்கும் என்று பாக்யராஜ் நம்பினார்.
இதற்காக அவர் நேரடியாக ரஜினிகாந்தின் வீட்டிற்கே சென்று, தனது பொருளாதார பின்னடைவை சொன்னார்.. ஒரு சில நாட்கள் மட்டும் வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் நடித்து கொடுக்குமாறு உதவி கேட்டுள்ளார்.. ஆனால், ரஜினிகாந்த் அதற்கு கால்ஷீட் கொடுக்க மறுத்துவிட்டாராம்.
நான் சிகப்பு மனிதன்
இதற்கு ரஜினிகாந்த் சொன்ன காரணம், ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தால், தனக்கு தெரிந்த மற்ற நண்பர்களும் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களிலும் அதேபோல கேமியோ ரோலில் நடிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்துவார்கள் என்பதால், பாக்யராஜ் கேட்டும், கால்ஷீட் தர மறுத்துவிட்டார்.
ஆனால், பாக்யராஜ் தனது உச்சக்கட்ட மார்க்கெட்டில் இருந்தபோதே, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்காக "நான் சிகப்பு மனிதன்" படத்தில் உடனே சம்மதித்து ஒரு சின்ன கேரக்டரில் நடித்துக் கொடுத்தார். அதாவது ரஜினி சாரே, பாக்யராஜ் சாருக்கு போனை போட்டு நடித்து தருமாறு கேட்டார்.. ரஜினிகாந்த் இப்படி கேட்டதுமே நடித்து தந்தார் பாக்யராஜ்.. அப்படிப்பட்ட பாக்யராஜ் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி என்று வந்தபோது ரஜினிகாந்த் மறுத்தது நியாயமற்ற செயலாகவே நான் பார்க்கிறேன்.
வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்
சமீபத்தில் பாக்யராஜுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.. அதில் ரஜினிகாந்த்தே இந்த சம்பவத்தை மேடையில் நினைவு கூர்ந்து வருத்தம் தெரிவித்தார்.
அன்று பாக்கியராஜ் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தபோது, தான் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்திருந்தால் அவரது பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்திருக்க முடியும் என்றும், அதைச் செய்யாமல் விட்டது தவறு என்றும் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார். ஆனால், காலம் கடந்து இப்போது வருத்தப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
ரஜினிகாந்த் இப்படியொரு மறுப்பை பாக்கியராஜுக்கு மட்டுல்லாமல், டி. ராஜேந்தருக்கும் செய்துள்ளார். "'ராகம் தேடும் பல்லவி" படத்தின் விநியோகத்தில் டி. ராஜேந்தருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து மீள, தான் இயக்கவிருந்த "உயிருள்ளவரை உஷா" படத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் அவர் கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் ரஜினி, தான் பெரிய நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன் என்று சொல்லி, கால்ஷீட் தர மறுத்துவிட்டாராம்.
75 வயதிலும் சூப்பர் ஸ்டாராக நீடிக்க காரணம்?
ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் சூப்பர் ஸ்டாராக நீடிப்பதற்கு அவரது உழைப்பும் திட்டமிடலும் முக்கியக் காரணம் என்றாலும், அவர் எப்போதும் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
ஏற்கனவே கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள பெரிய தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர, நலிவடைந்த சக கலைஞர்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்து உதவவில்லை.. இத்தகைய போக்கு பாக்கியராஜ்ஜுக்கு ஒரு வடுவாகவே இருந்தது. ஒருவர் மறைந்த பின்பு அவரைப் புகழும் சினிமா துறையினர், அவர் வாழும் காலத்தில் நலிவடையும் போது ஏன் உதவ முன்வருவதில்லை?" என்று பாலாஜி பிரபு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications