இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,626 பணியிடங்கள்.. ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1,626 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பு, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். இது குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL). இந்த நிறுவனத்தில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நாடு முழுவதும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் காலியாக உள்ள 1,626 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் ஒரு ஆண்டு கால அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடம் ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் உள்ள IOCL சுத்திகரிப்பு நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
* டிரேடு அப்ரண்டிஸ் - அட்டெண்டன்ட் ஆபரேட்டர் (கெமிக்கல் பிளாண்ட்)
* டிரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர்
* டிரேடு அப்ரண்டிஸ் - பாய்லர்
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ் - கெமிக்கல்
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல்
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல்
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ் - இன்ஸ்ட்ரூமென்டேஷன்
* டிரேடு அப்ரண்டிஸ் - செகரட்டேரியல் அசிஸ்டென்ட் (அலுவலக உதவியாளர்)
* டிரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டன்ட் (கணக்காளர்)
* டிரேடு அப்ரண்டிஸ் - டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (தரவுப் பதிவு ஆபரேட்டர்)
கல்வித் தகுதி
கல்வித்தகுதியானது பணிக்கு ஏற்ப மாறுபடும். 12-ம் வகுப்பு (+2), ஐடிஐ (ITI), டிப்ளமோ, பிஎஸ்சி, பிஏ, பிகாம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 30.06.2026 நிலவரப்படி கணக்கில் கொள்ளப்படும். அதன்படி குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 24க்குள்ளம் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
வயது தளர்வு:
* எஸ்சி / எஸ்டி - 5 ஆண்டுகள்
* ஓபிசி (NCL) - 3 ஆண்டுகள்
* மாற்றுத்திறனாளிகள் (PwBD): பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் அப்ரண்டிஸ்களுக்கு அப்ரண்டிஸ் சட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட தகுந்த மாத உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
தேர்வு முறை:
மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://iocl.com/apprenticeships பக்கத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.07.2026 மாலை 05.00 மணி ஆகும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://iocl.com/apprenticeships















Click it and Unblock the Notifications