அமைச்சர் சரத்குமார் ‘பவுடர்’ வீடியோ: "கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்" - பள்ளி நண்பர் பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் சரத்குமார் சம்பந்தப்பட்ட வீடியோ விவகாரம், தற்போது கொலை மிரட்டல் புகாராக உருவெடுத்து உள்ளது. தவெக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோவை வெளியிட்டது அவரது பள்ளிக்கால நண்பர்தான் என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், அவருக்கு அமைச்சர் ஆதரவாளர்கள் கத்தியுடன் வந்து கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தவெக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத் குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் பார்க்கும்போது ஸ்டேடியத்தில் தனது கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு, தனது கிரெடிட் கார்டால் வெள்ளை நிற பவுடரை கையாளும் வீடியோ வைரலானது. இந்தச் செயல் பொதுவாக போதைப்பொருள் உட்கொள்ளும் முறையை ஒத்திருப்பதால் சர்ச்சை எழுந்தது.

Sarathkumar Drug Video Controversy

இந்த குற்றச்சாட்டை சரத் குமார் மறுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க, குடும்ப நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த சமயத்தில் 'என் மகள் மாத்திரை சாப்பிட மாட்டாள்.. துப்பிவிடுவாள் என்பதால், தண்ணீரில் கலந்து பாப்பாவுக்கு கொடுக்க வேண்டும்' என என் மனைவி கூறினார். அப்போது ஒரு மாத்திரையை நொறுக்கி கொடுத்தோம். அது, போதை மாத்திரை என அவதூறு பரப்புகிறார்கள். மைதானத்தில் அவ்வளவு கூட்டத்தில், போலீஸ் பாதுகாப்போடு, போதைப் பொருளை பயன்படுத்த முடியாது எனக் கூறி இருந்தார்.

எனினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சர் சரத் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டது அமைச்சரின் பள்ளி காலத்து வகுப்புத் தோழரான சரண் ஜெயராமன் தான் என அமைச்சர் தரப்பினர் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் தனது வீட்டை முற்றுகையிடுவதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி சரண் ஜெயராமன் தாம்பரம் துணை ஆணையரிடம் பாதுகாப்பு கோரி பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சரண் ஜெயராமன், தவெகவினரின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நானும் அமைச்சர் சரத்தும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால், அந்த வீடியோவை நான் தான் ரிலீஸ் செய்திருப்பேன் என்று பழிபோடுகிறார்கள். மேலும், நான் ஒரு திமுக ஆதரவாளர் என்பதால் இந்த சந்தேகம் அவர்களுக்கு வலுத்துள்ளது.

எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லும் தவெக அரசு, இந்த விவகாரத்திலும் திமுக மீது பழிபோடப் பார்க்கிறது. அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்பதை விசாரித்து உண்மைத்தன்மையைக் கண்டறிவதை விட்டுவிட்டு, இந்த வீடியோவை யார் ரிலீஸ் செய்தார்கள் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் இது யாருக்கான அரசு? தவெக அரசு தங்களின் அமைச்சரைக் காப்பாற்றத் துடிக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "அதிகாரம் இப்போது தவெக அரசின் கையில் தான் இருக்கிறது. சரத்குமார் யாரிடமிருந்து போதைப்பொருள் வாங்கினார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அதை விடுத்து, குழந்தை மற்றும் மனைவியுடன் வந்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தால் மக்கள் அப்படியே நம்பிவிடுவார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன் வீட்டிற்கு கத்தியுடன் ஆட்கள் அனுப்பப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ள சரண் ஜெயராமன், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் சம்பந்தப்பட்ட வீடியோ விவகாரத்தில் அவரது நெருங்கிய நண்பரே தவெக அரசுக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+