என்ஜினீயரிங் பட்டதாரியா நீங்க.. BEL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000 வரை சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிம்மிடெட் நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயர் மற்றும் திட்ட என்ஜினீயர் அல்லது அலுவர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் ஒன்றாக பாரத் எலக்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயர் மற்றும் திட்ட என்ஜினீயர் ஆகிய பொறுப்புகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 205 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பணிக்கு சேர தகுதிகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

காலிப்பணியிடம்: மொத்தம் 205 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் ஆகிய என்ஜினீயரிங் பாடப் பிரிவில் பல்கலைக்கழக மானியக்குழு அல்லது AICTCஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அதுமட்டுமின்றி JAVA, php போன்ற கம்பூட்டர் புரோகிராமில் சிறந்த அனுபவம் பெற்றிருப்பது சிறந்தது.
சம்பளம் விவரம்: இந்த பணியில் சேருபவர்களுக்கு முதல் ஆண்டில் மாதம் தோறும் ரூபாய் 30 ஆயிரம் வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பின்னர் மாத சம்பளம் 35 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி காலத்திற்கு பின்னர் அதாவது ப்ராஜெக்ட் என்ஜினீயராக நியமிக்கப்படும் போது மாதம் ரூ.45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: பயிற்சி என்ஜினீயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி இடஒதுக்கீட்டின் கீழ் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும். பயிற்சி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த மாதம் (ஜூன்) 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிம்மிடெட் நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயர் மற்றும் திட்ட என்ஜினீயர் அல்லது அலுவர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://jobapply.in/bel2023JUNBNG/ என்ற இணையதள முகவரியில் கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
என்னென்ன சான்றிதழ்கள் தேவை: 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், என்ஜினீயரிங் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்ச்சி பெற்ற பின்னர் நேர்முகத்தேர்வின் போது இதன் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு: திட்ட என்ஜினீயர் அல்லது திட்ட அலுவலர் பதவிக்கு ரூ.472 விண்னப்ப கட்டணமாக பெறப்படுகிறது. இதேபோல் பயிற்சி என்ஜினீயர் பதவிக்கு ரூ.177 விண்ணப்ப கட்டணமாக பெறப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிகளானது ஒப்பந்த பணிகளாகும். திட்ட என்ஜினீயர் பதவிக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த பணிகளும், பயிற்சி என்ஜினீயர் பதவிக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் https://jobapply.in/bel2023JUNBNG/செய்யவும்.












Click it and Unblock the Notifications