மாதஊதியம் ரூ.63,000.. 10-ம் வகுப்பு முடித்தாலே போதும்.. ஏஓசியில் வேலை..விண்ணப்ப தேதி முடியப்போகுது
ராணுவ ஆர்டினன்ஸ் கார்ப்ஸில் காலியாக உள்ள 1,793 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இஇதற்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 18 ம் தேதி கடைசி நாளாகும்.
சென்னை: இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸில் காலியாக உள்ள 1,793 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்திய ராணுவத்தின் ஒருபகுதியாக ஏஓசி எனும் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் ( Army Ordnance Corps or AOC) உள்ளது. இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாட பொருட்களை வழங்கும் மிகப்பெரிய பணியை இது செய்து வருகிறது.
இந்நிலையில் தான் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
ஏஓசி எனும் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸில் Tradesman Mate மற்றும் Fireman என 2 பிரிவுகளில் மொத்தம் 1,793 பணியிடங்கள் காலியாக உள்ளன. Tradesman Mate பணிக்கு 1,249 காலியிடங்களும், Fireman பணிக்கு 544 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் வகுப்புக்கு நிகரான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் குறைந்த பட்சம் வயது என்பது 18 ஆகவும், அதிகபட்ச வயது என்பது 25 ஆகவும் இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம் என்ன?
Tradesman மற்றும் Fireman பணிக்கு தனித்தனியாக சம்பளம் நிர்ணயம் செய்ய்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தப்பட்சமாக ரூ.18,000 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 வரை வழங்கப்படும். அதன்படி Tradesman பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், Fireman பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Army Ordnance Corpsன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aocrecruitment.gov.in சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 18 ம் தேதி(நாளைமறுநாள்) கடைசி நாளாகும்.
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications