ராணுவத்தில் சேர அருமையான வாய்ப்பு.. கோவையில் நவம்பர் 4ம் தேதி முகாம் தொடங்குகிறது
கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் நவம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, டையு, டாமன் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தில் சேருவதற்கு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என்று ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் அறிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று பலருக்கும் சிறுவயதில் இருந்தே ஆசையிருக்கும். அதுவும் நேரடியாக நடைபெறும் முகாம்களில் பங்கேற்று வென்று ராணுவ வீரராக ஆசைப்படுவார்கள். இந்நிலையில் ராணுவத்தை பொறுத்தவரை மண்டல வாரியாக ஆட்சேர்ப்பு முகாம் அடிக்கடி நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது கோவையில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது..

ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் சார்பில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வருகிற நவம்பர் 4-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ராணுவ வீரர்கள், சமையல் கலைஞர்கள், சலவை தொழிலாளி, கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதில் ராணுவ வீரர்கள் மட்டும் 174 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நவம்பர் 4-ந் தேதி தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, டையு, டாமன் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும், நவம்பர் 5-ந் தேதி ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கும், 6-ந் தேதி ராஜஸ்தான், மராட்டியத்தை சேர்ந்தவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும். நவம்பர் 7-ந் தேதி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக் கோட்டை, ராணிபேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
நவம்பர் 8-ந் தேதி கோவை, சென்னை, ஈரோடு, குமரி, சேலம், மதுரை, ராம நாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திரு வண்ணாமலை, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். நவம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கேரளாவை சேர்ந்தவர்கள் பங்கேற்க லாம். உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்கள், மருத்துவ தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் அறிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications