விரைவில் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட்! முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? இதோ ஈஸி வழி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் பல்வேறு நிறுவனங்களில் சுமார் 6000 குரூப் 4 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 15.8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இதற்கான ரிசல்ட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதனை எப்படி செக் செய்வது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது முதலில் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in வெப்சைட்டுக்கு செல்லவும்.
அதில் recruitments எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் ரிசல்ட் எனும் டேப் இருக்கும். அதை கிளிக் செய்தால் ரீசன்ட் ரிசல்ட் எனும் பகுதி வரும் அதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது Group 4 Results எனும் லிங்க் இருக்கும் அதை கிளக் செய்ய வேண்டும். அங்கு உங்கள் லாக்-இன் விவரங்களை உள்ளிடவும்.
பின்னர் கீழே TNPSC group 4 results எனும் ஆப்ஷன் இருக்கும் அதை கிளக் செய்ய வேண்டும். இங்கு உங்கள் ரிசல் விவரங்கள் இருக்கும். இதனை டவுன்லோட் செய்தும் பார்த்துக்கொள்ளலாம்.
கடந்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்புகள் வெளியாகியிருந்தன. எனவே ரிசல்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதேபோல இந்த முறை இன்வேலிட் மதிப்பு முறை அறிமுகப்படடுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலைத் தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண், மதிப்பெற்றதாக (இன்வேலிட்) கருதப்படும்.












Click it and Unblock the Notifications