தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைகள்.. ரூ. 1,82,400 வரை ஊதியம்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 22 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 2021 ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அஞ்சல் வழியாக சென்று சேர வேண்டிய கடைசி தேதி தான் ஜனவரி 5ம் தேதியாகும்.

Assistant Professors jobs at the Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University in Nagapattinam

வேலை இடம்: நாகப்பட்டினம்

வேலையின் பெயர்: உதவிப்பேராசிரியர்

வேலை வகை: தமிழக அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 22

துறைவாரியான காலியிடங்கள்:

1. Aquaculture - 07

2. Fish Processing Technology - 02

3. Fishing Technology and Fisheries Engineering - 03

4. Aquatic Environment Management - 03

5. Fisheries Biology and Resource Management - 03

6. Fish Pathology and Health Management - 02

7. Fisheries Extension - 01

8. Fisheries Economics - 01

மாத ஊதிய விவரம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் B.F.Sc. முடித்து முதுகலை பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது: உரிய கல்வி தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்கள் அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002"

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2021.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+