தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு? யாரெல்லாம் விண்ணபிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 6 காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Assistant Programmer, Zonal Waqf Officer, Survey Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க வக்பு வாரியம் சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு;
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வக்பு கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் "QAUMI WAQF BOARD TARAQQIATTI SCHEME" திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 6 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
(1) Assistant Programmer - 3 காலிபணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டும் மாத ஊதியம் ரூ.15,000/-, தகுதி-அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினியில் அறிவியல் பட்டம் / பி.சி.ஏ அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்

(2) Zonal Waqf Officer- 1 காலி பணியிடம் 12 மாதங்களுக்கு மாத ஊதியம் ரூ.27,000/- மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது இதற்கு சமமான நிர்வாக அனுபவம்
(3) Survey Assistant -2 காலி பணியிடங்கள் - 12 மாதங்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000/- தகுதி-சர்வே அலுவலர்கள், களப்பணியில் அனுபவம் பெற்ற கணக்கெடுப்பு / வருவாய் அல்லது இதற்கு ஏற்ற துறையிலிருந்து ஓய்வு பெற்ற அனுபவமுள்ளவர்களிடமிருந்து 31.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications