சுப்ரீம் கோர்ட்டில் வேலை..80 பணியிடங்கள்..10ம் வகுப்பு தகுதி + 46 ஆயிரம் சம்பளம்.. தேதி முடியபோகுது!
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 80 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. 10 ஆம் வகுப்பு தகுதியுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகிறவர்களுக்கு மாதம் 46 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.
நாட்டின் அதிக அதிகாரம் கொண்ட அமைப்புகளில் ஒன்று உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தில் அலுவல் பணிக்காக 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவல் பணியிடங்கள், அட்டெண்ட்ண்ட் பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் 80 ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 80 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் (சமையல் தெரிந்து இருக்க வேண்டும்) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை குறைந்தப்பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சமையல் பிரிவு துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும், 27 வயதுக்குட்பட்டவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுக்ள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஓபிசி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: இந்த பணியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ. 46,210 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, செய்முறை திறன் தேர்வு (சமையல்) மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ 400 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ.200 கட்டணம் ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளம் வாயிலாக http://www.sci.gov.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (12.09.2024) தான் கடைசி நாள் ஆகும். எனவே தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/08/2024081713.pdf












Click it and Unblock the Notifications