ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளம்.. சென்னை ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: சென்னை நாவலூரில் செயல்பட்டு வரும் Avasoft ஐடி நிறுவனத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று (மே 21) கடைசி நாளாகும்.
சென்னையில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் அவாசாப்ஃட். இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை நாவலூர் எஸ்எஸ்பிடிஎல், பீட்டா பிளாக்கில் 3வது தளத்தில் ஆல்பா சிட்டியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது Cloud Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்களும், 2024ல் கடைசி ஆண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேசன் திறமை மற்றும் வணிகம் குறித்த நல்ல அறிவு( good business acumen) இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் படித்து முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட மேற்கண்ட திறமை இருப்பின் விண்ணப்பம் செய்து பணியை பெற முடியும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் Avasoft நிறுவனத்தின் இணையதள பக்கத்துக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு மே 22, 23 ஆகிய தேதிகளில் குரூப் டிஸ்கஷன் (Virtual Mode) இருக்கும். அதன்பிறகு மே 27ம் தேதி இன்டர்வியூ இருக்கும். இன்டர்வியூ என்பது நாவலூரில் இருக்கும்.
அவாசாப்ஃட் நிறுவனத்தில் வைத்து நடக்கும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89250 08708, 95000 39033 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications