IT Jobs: ரூ.10 லட்சம் வரை சம்பளம்.. சென்னை ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலை! ஆக.,19 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் சம்பளத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 19 கடைசி நாள். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனங்களில் ஒன்று AVASOFT. இந்த நிறுவனம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் அலுவலகம் உள்ளது.

it jobs jobs job

சென்னை நாவலூரில் உள்ள எஸ்எஸ்பிடிஎல் பெட்டா பிளாக்கின் 3வது மாடியில் (Alphacity) இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அவாசாப்ட் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

அவாசாப்ட் நிறுவனத்தில் தற்போது டிரெய்னி இன்ஜினியர் - டேட்டா சயின்ஸ் (Trainee Engineer - Data Science) பணிக்குஆட்கள் தேர்வு செய்ப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கல்லூரியில் எந்த படிப்பை முடித்தவர்களாக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு 0-1 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு SQL பற்றிய புரிதல் நன்கு இருக்க வேண்டும். அதேபோல் பைத்தான் (Python) பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இதுதவிர இடிஎல் டூல்ஸ்களான Databricks, ADF, Aws Glue மற்றும் ரிப்போர்ட்டிங் டூல்ஸ்களான Power BI, Tableau, QuickSight உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆகும். இன்னும் 6 நாட்கள் மடடுமே உள்ளது. இதனால் உடனே விண்ணப்பிப்பது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஆகஸ்ட் 23ம் தேதி ரிட்டன் தேர்வு இருக்குமு். அதன்பிறகு ஆகஸ்ட் 25ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ நடக்கும். இறுதியாக தேதி மற்றும் இடம் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டு கடைசி கட்ட இண்டர்வியூ நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+