ரூ.6 லட்சம் டூ ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. அனுபவம் வேண்டாம்.. ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Avasoft சார்பில் புதிய வேலைவாய்ப்புபற்றிய அறிவிப்பு வெளியானது. இதற்கான தேதி முடிவடைந்த நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து செப்டம்பர் 26ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனங்களில் ஒன்று AVASOFT. இந்த நிறுவனம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் அலுவலகம் உள்ளது.

சென்னை நாவலூரில் உள்ள எஸ்எஸ்பிடிஎல் பெட்டா பிளாக்கின் 3வது மாடியில் (Alphacity) இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அவாசாப்ட் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
அவாசாப்ட் நிறுவனத்தில் தற்போது டிரெய்னி க்யூஏ - பிசினஸ் அனலிஸ்ட் (Trainee AQ/Business Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2024, 2025, 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 0 - ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனால் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் அவர்களுக்கு முக்கிய சில தகுதிகள் வேண்டும். அந்த வகையில் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்தருக்க வேண்டும். பிசினஸ் அனலிசிஸ் மற்றும் குவாலிட்டி அசூரன்ஸில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆட்டோமோஷன் டெஸ்ட்டிங் - செலினியம் (ஜாவா அல்லது பைத்தான்) தெரிந்திருப்பதோடு, எஸ்டிஎல்சி மற்றும் கோர் டெஸ்ட்டிங் கான்செப்ட்டை பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்ப தேதி கடந்த ஜூலை 25ம் தேதி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 26ம் தேதி குரூப் டிஸ்கஷன் மூலமாக இண்டர்வியூ தொடங்க உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 6ம் தேதி ஆன்லைன் டெக் இண்டர்வியூ நடக்கும். பிறகு பைனலாக எச்ஆர் இண்டர்வியூ நடக்கும். எச்ஆர் இண்டர்வியூவுக்கான தேதி கடைசியாக அறிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications