ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. அப்ளை பண்ண ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணுவ நலன் கல்வி சங்கம் (AWES) மூலம் ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு தேவையான வயது வரம்பு கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ராணுவ கண்டோன்மெண்ட் மற்றும் ராணுவ நிலையங்களில் உள்ள ராணுவ பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் வெல்லிங்க்டன் ஆகிய இடங்களில் ராணுவ பொது பள்ளிகள் உள்ளன. ராணுவ பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் (PGT), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்(TGT), முதன்மை ஆசிரியர் (PRT) ஆகிய பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. மொத்தம் 458 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 AWES Recruitment 2023: TGT, PGT, PRT Posts, How to apply

கல்வி தகுதி: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் மற்றும் பிஎட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு பிரிவுகளிலுமே 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். TGT- பணியிடத்திற்கு விரும்புவோர் பட்ட படிப்புடன் பிஎட் முடித்து இருக்க வேண்டும். 50 சதவீத மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

பிரைமரி ஆசிரியர் பணியிடத்திற்கு பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும். அதோடு இரண்டு ஆண்டுகள் படிப்பு கொண்ட D.El.Ed./B.El.Ed ஆகிய ஏதேனும் ஒன்றை முடித்து இருக்க வேண்டும். அல்லது பி.எட் முடித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த கல்வி தகுதி அவசியம். இதுபற்றிய விவரத்தை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://ost.awes.cbtexamportal.in/#/login என்ற இணையதளம் மூலமாக தேவையான விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.09.2023 ஆகும். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். அதன்பிறகு நேர்காணல் செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமைக்கப்படும். 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். செப்டம்பர் 30 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள https://www.awesindia.com/ என்ற இணையதளத்தை கிளிக் செய்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+