ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை ஊதியம்.. மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல் அல்லது BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் பல்வேறு காலியிடங்கள் நிரப்புவது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
மொத்தம் 150 இடங்கள் காலியாக உள்ளன. டிரெய்னி என்ஜினீயர் -I பிரிவில் மொத்தம் 80 பணிகளும், ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பிரிவில் 70 பணிகளும் நிரப்பப்பட உள்ளது. டிரெய்னி என்ஜனீயர் பொறுப்பின் கீழ் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் (ECE) பிரிவில் 54, மெக்கானிக்கல் பிரிவில் 20, எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் (EEE) பிரிவில் 04, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 2 இடங்கள் காலியாக உள்ளன. அதேநேரத்தில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் (ECE) -44, மெக்கானிக்கல் 20, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் (EEE) பிரிவில் 04 கம்யூட்டர் சயின்ஸ் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது என்ஜினீயரிங் கல்லூரியில் முழு நேரமாக பிஇ, பிடெக் படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியமாகும். டிரெய்னி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயதானது 01.08.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.

மாத ஊதியம் எவ்வளவு?
இது ஒப்பந்த பணி என்பதால் டிரெய்னி பணியிடத்துக்கு முதல் ஆண்டில் ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டில் ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டில் ரூ.40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ஊதியமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியை பொறுத்தமட்டில் முதல் ஆண்டு ரூ.45,000, 2வது ஆண்டு ரூ.50,000 மற்றும் 3வது ஆண்டு ரூ.55,000, 4வது ஆண்டு ரூ.55,000 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை எப்படி?
எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியை பொறுத்தமட்டில் 3 ஆண்டு ஒப்பந்த பணி வழங்கப்படும். தேவையெனில் 4வது ஆண்டு தொடரப்படும். டிரெய்னி என்ஜினீயர் பணி என்பது 2 ஆண்டு ஒப்பந்த பணி. தேவையெனில் கூடுதலாக ஒரு ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் www.bel-india.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பொது, பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள், ஓபிசி பிரிவினர் புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு ரூ.472, டிரெய்னி பணிக்கு
ரூ.177ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் விபரங்கள் அறிய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications