"வீட்டில் இருந்தே வேலை".. அலுவலகம் செல்ல வேண்டாம்.. Cognizant நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: காக்னிசண்ட்டில் ஐடி நிறுவனம் சார்பில் வீட்டில் இருந்து பணியாற்றும் வகையிலான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் (Cognizant). Cognizant Technology Solutions Corporation எனும் இந்த நிறுவனம் சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விவரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது சீனியர் புராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Senior Process Executive - Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Claims Adjudication பணியில் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
அதேபோல் Claims and Payer Domains பற்றிய புரிதல் இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்றும் இப்பதோடு certified Professional Coder (CPC) அல்லது Equivalent Certification in claims adjudication வைத்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.
இது ஒரு Remote வகை பணியாகும். இதனால் தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அலுவலகம் செல்ல தேவையில்லை. இருப்பினும் ஊழியர்கள் பெங்களூரில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணி தொடர்பாக ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளனர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கடந்து விட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications