டிகிரி ஓகே.. பெங்களூர் கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.6 -13 லட்சம் சம்பளத்தில் வேலை.. நல்ல சான்ஸ்
சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.13 லட்சம் சம்பளத்தில் அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
இந்தியா உள்பட உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பயன்படுத்தும் சர்ச் என்ஜினாக (Search Engine) கூகுள் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பெங்களூரில் கூகுள் நிறுவனம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூரில் செயல்பட்டு வரும் கூகுளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் Compliance Operations Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் நிதி நிலைமையை ஆராயவும், வணிக மேலாண்மையை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டியிருக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை இளங்கலை பட்டப்படிப்பை பிசினஸ், அக்கவுண்டிங், ஃபைனான்ஸ் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் கான்ட்ராக்ட் மேனேஜ்மென்ட்/ஆபரேஷன் அல்லது சேல்ஸ் ஆபரேஷன்ஸ், அக்கவுண்டிங், ஃபைனான்ஸ், டிரான்ஸ்பார்மேஷன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் கம்யூனிகேஷன் திறமை நன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் நன்றாக உரையாடும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் சம்பளத்தின் இறுதி வடிவம் என்பது தகுதி மற்றும் திறமையை பொறுத்து தான் அமையும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 4ம் தேதிக்குள் Google-லின் அதிகாப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications