‛‛அலுவலகம் செல்ல வேண்டாம்’’.. வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.. சூப்பர் வாய்ப்பு தரும் மைக்ரோசாஃப்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் வீட்டில் இருந்தே வேலை செய்ய சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யலாம்.

பிரபல எம்என்சியான மைக்ரோசாஃப்ட் ஐடி நிறுவனத்தில் ஒன்று மைக்ரோசாஃப்ட்(Microsoft). இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ளன.

it jobs job jobs

அதன்படி பார்த்தால் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் இயங்கி வரும் மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனம் சார்பில் வீட்டில் இருந்தே பணி செய்ய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி பெங்களூர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்புடைய டெக்னிக்கல் பிரிவில் சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், பைத்தான் உள்ளிட்டவற்றில் ஓராண்டில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அல்லது பணிக்கு தொடர்பான பிரிவில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி NoSQL databas-ல் MongoDB, Cassandra, Redis உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் AND RESTful APIs, microservices, distributed systems மற்றும் டேட்டா ஸ்ட்ரெக்சர்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ், க்ளைட் சர்வீசஸ் (Cloud Services) பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கான பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் என்பது மாறுபடலாம். சம்பளம் குறித்த விபரங்கள் நேர்க்காணலின்போது தெரிவிக்கப்படலாம்.

இந்த பணிக்கான அறிவிப்பு என்பது ஜுலை 2ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக மைக்ரோசாஃப்ட் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பல சலுகைகளை வழங்க உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஹெல்த் இன்சூரன்ஸ், படிப்புக்கான உதவி, பிரசவகால விடுமுறை மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய கால விடுமுறை, வீட்டில் இருந்து பணி செய்ய வசதியாக நெட்வொர்க் கனெக்ட்டிவிட்டி, சிஸ்டம்ஸ் உள்ளிட் பிற சலுகைகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி 100 சதவீதம் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+