‛‛டிகிரி போதும்’’.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? சாப்ட்வேர் என்ஜினியராக சூப்பர் வாய்ப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி, மாஸ்டர் டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் NetAPP. இந்த நிறுவனம் unified data storage, integrated data services மற்றும் cloud operations (CloudOps) solutions உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் பெங்களூரில் NetAPP நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரிவில் டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் 0 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி இப்போது தான் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு Python கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். சி++, REST API, cloud and Virutalization, ReactJS, உள்ளிட்டவை தெரிந்திருந்து வைத்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு போனஸாக அமையும். மேலும் VMWare, ESX, Linux KVM தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? என்பதும், தேர்வு செய்யப்படும் நபருக்கான மாதசம்பளம் பற்றிய விபரமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் சம்பளத்தை பொறுத்தவரை அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக NetAPP நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications