Wipro-வில் சூப்பர் வேலை.. ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம்! மிஸ் பண்ணாதீங்க.. செம வாய்ப்பு
பெங்களூர்: பெங்களூர் விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டெவலப்பர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யயலாம்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies)ஒன்று. இந்த நிறுவனம் பெங்களூரில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் பெங்களூர் விப்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின் படி விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் டெவலப்பர் (Developer) பணியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். பணியிடங்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த பணிக்கு 2020, 2021, 2022, 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்போர் விண்ணப்பம் செய்யலாம். அதாவது ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து 0-1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்போர் விண்ணப்பம் செய்யலாம். மேலும் ப்ரோகிராமிங்கில்(ஆட்டோமேஷன், டூல்ஸ், சிஸ்டம்ஸ்) நல்ல நிபுணத்துவம் இருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பத்தை கற்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கோடிங்கில் பிழை இன்றி எழுதுவது, கோடிங்கில் ஏதேனும் தவறு இருப்பினும் அதனை சரிசெய்யும் திறமை இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் என்பது என்பது கிடைக்கும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இது ஒரு முழுநேர பணியாகும். அலுவலகத்தில் இருந்தே பணி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications