மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் மூலம் வாழ்க்கையில் மேம்பட நாளை வங்கிக் கடன் முகாம்
சென்னை: சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, "சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம்" வருகிற வியாழன் 10/03/2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை, கிண்டியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையத்தில் (NCSC-DA) நடைபெற உள்ளது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்:-
• சுய தொழில் செய்வதற்கு மானியத்துடன் ரூபாய் 25,000 முதல் ரூபாய் ஒரு லட்சம் வரை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.
• மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது.
• மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு ரூபாய் 50 ஆயிரம் மானியம் வழங்கிட பரிந்துரை செய்யப்பட உள்ளது.
• மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூபாய் ஐந்து லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கிட ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், கீழ்காணும் விண்ணப்பங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், யூ.டி.ஐ.டி. அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன், சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் வங்கி கடன் விண்ணப்ப படிவம்.
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021060179.pdf
கூட்டுறவு வங்கி சுய தொழில் வங்கி கடன் விண்ணப்பம்
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021060133.pdf
மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு பரிந்துரை விண்ணப்பம்
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/02/2022020438.pdf
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications