வங்கி நோட்டு அச்சகத்தில் வேலை.. ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் வங்கி நோட்டு அச்சகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசர், ஜூனியர் அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னிஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் பேங்க் நோட் பிரஸ் எனப்படும் வங்கி நோட்டு அச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் புழக்கத்தில் பணத்தாள்களை அடிக்கும் மூன்று நிறுவனங்களில் இதுவும் ஒன்று. பெங்களூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட், நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் ஆகிய மூன்று அச்சகங்களிலும் இந்திய ரூபாய் தாள்கள் அச்சிடப்படுகின்றன.

நிதி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் இந்த பேங்க் நோட் பிரஸ் அச்சகத்தில் தற்போது 111 பணியிடங்களை நிரப்புவதற்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்வைசர், ஜூனியர் அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னிஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன, சம்பளம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை கீழ் பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: சூப்பர்வைசர் (பிரிண்டிங்) 08 , சூர்ப்பர்வைசர் (கண்ட்ரோல்)03, சூப்பர்வைசர் (ஐடி) 01, ஜூனியர் அலுவலக உதவியாளர் 04, ஜூனியர் டெக்னிஷியன் (பிரிண்டிங்) 27, ஜூனியர் டெக்னிஷியன் (கண்ட்ரோல்)45, ஜூனியர் டெக்னிஷியன் (இங்க் பேக்டரி உள்ளிட்ட இடங்களில்) 15, ஜூனியர் டெக்னிஷியன் (மெக்கானிக்கல்/ஏர் கண்டிஷன்னிங்) 03, ஜூனியர் டெக்னிஷியன் (எலக்ட்ரிக்கல்/ ஐடி) 04, ஜூனியர் டெக்னிஷியன் (சிவில் / சுற்றுச்சூழல்)01 என மொத்தம் 111 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு துறை சார்ந்த ஐடிஐ பிரிவு மற்றும் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி என்ன? அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பிரிண்டிங் டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். பி இ/ பிடெக் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. என்ஜினியரிங்கில் துறை சார்ந்த கல்வி தகுதி கோரப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு? சூப்பர்வைசர் (பிரிண்டிங்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்த பட்சம் ரூ.27,600 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.95,910 வரை வழங்கப்படும். அதேபோல் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை வழங்கப்படும். ஜூனியர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 21,540 முதல் 77,160 வரை சம்பளம் கிடைக்கும்
வயது வரம்பு: ஐடிஐ தகுதி உள்ள பணியிடங்களுக்கு 25 வயதுக்கு மிகாமலும் பி இ/ பிடெக், டிகிரி தேவைப்படும் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.200 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்வு குறித்த மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ள https://bnpdewas.spmcil.com/en/discover-spmcil/#career இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications