Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 104 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குழுத் தலைவர், துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத் மாநிலம் வதோராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. தற்போது இந்த வங்கியில் குழுத் தலைவர், மண்டலத் தலைவர், துணை மேலாளர் உள்ளிட்ட 104 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பணியிடங்கள் விவரம்:
AVP II - குழுத் தலைவர்: 04 பணியிடங்கள்
AVP II - மண்டலத் தலைவர்: 17 பணியிடங்கள்
துணை மேலாளர் - மூத்த உறவு மேலாளர்: 70 பணியிடங்கள்
துணை மேலாளர் - முதலீடு மற்றும் காப்பீடு: 13 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் (Graduation) முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலாண்மையில் 2 வருட முழுநேர முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். NISM/IRDA போன்ற ஒழுங்குமுறைச் சான்றிதழ்கள் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
பணி அனுபவம் தேவை:
AVP II - குழுத் தலைவர்: நிதி சேவைத் துறையில் செல்வ மேலாண்மை/சில்லறை வங்கி/முதலீடுகளில் விற்பனையை நிர்வகித்ததில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் தேவை. இதில் பிராந்திய அளவில் ரிலேஷன்ஷிப் மேலாளர்கள் மற்றும் குழுத் தலைவர்கள் அடங்கிய பெரிய குழுவை நிர்வகித்ததில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
AVP II - மண்டலத் தலைவர்: செல்வ மேலாண்மையில் ரிலேஷன்ஷிப் மேலாண்மைப் பிரிவில் குறைந்தபட்சம் 6 வருட அனுபவம் தேவை. இதில் குறைந்தது 2 வருடங்கள் குழுத் தலைவராகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
துணை மேலாளர் - மூத்த உறவு மேலாளர்: பொதுத்துறை வங்கிகள்/தனியார் வங்கிகள்/வெளிநாட்டு வங்கிகள்/புரோக்கிங் நிறுவனங்கள்/செக்யூரிட்டி நிறுவனங்கள்/அசெட் மேலாண்மை நிறுவனங்களில் செல்வ மேலாண்மைப் பிரிவில் ரிலேஷன்ஷிப் மேலாளராக குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் தேவை.
துணை மேலாளர் - செல்வ ஆலோசகர் (முதலீடு மற்றும் காப்பீடு): செல்வ மேலாண்மைப் பிரிவில் ரிலேஷன்ஷிப் மேலாளராக/முதலீட்டு ஆலோசகராக குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் தேவை. மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீடு, PMS, AIF மற்றும் முதலீட்டுத் தயாரிப்புகள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பானது 01.03.2026 நிலவரப்படி கணக்கிடப்படும்.
AVP II - குழுத் தலைவர்: குறைந்தபட்சம் 31 ஆண்டுகள், அதிகபட்சம் 45 ஆண்டுகள்.
AVP II - மண்டலத் தலைவர்: குறைந்தபட்சம் 27 ஆண்டுகள், அதிகபட்சம் 40 ஆண்டுகள்.
துணை மேலாளர் - மூத்த உறவு மேலாளர்: குறைந்தபட்சம் 24 ஆண்டுகள், அதிகபட்சம் 35 ஆண்டுகள்.
துணை மேலாளர் - செல்வ ஆலோசகர்: குறைந்தபட்சம் 24 ஆண்டுகள், அதிகபட்சம் 45 ஆண்டுகள்.
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ST/SC பிரிவினருக்கு 5 வருடங்கள், OBC பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரிவைப் பொறுத்து 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள், முதலில் ஆன்லைன் தேர்வு, அதைத் தொடர்ந்து சைக்கோமெட்ரிக் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பெண்கள், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- எனவும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.850/- எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், பேங்க் ஆஃப் பரோடாவின் Careers' பக்கத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்து, மார்ச் 27, 2026 முதல் ஏப்ரல் 16, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications