Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை.. லட்சத்தில் சம்பளம்! பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank of Baroda) சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனியர் மேனேஜர் டெவலப்பர் ஜாவா, மேனேஜர் டெவலப்பர் ஜாவா என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 418 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பஇ/ பிடெக், எம்இ/ எம்.டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 1,05,280 வரை வழங்கப்படும்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத் மாநிலம் வதோராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* சீனியர் மேனேஜர் டெவலப்பர் ஜாவா - 28
* மேனேஜர் டெவலப்பர் ஜாவா - 27
* ஆஃபிசர் டெவலப்பர் ஃபுல் ஸ்டாக் ஜாவா - 03
* மேனேஜர் கிளவுட் என்ஜினியர் - 24
என மொத்தம் 30 வகையான பணியிடங்களில் 418 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
பஇ/ பிடெக், எம்இ/ எம்.டெக், எம்.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். அனுபவமும் கோரப்பட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும்.
வயது வரம்பு:
24 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
அதிகபட்சமாக மாதம் ரூ.85,920 - 1,05,280/- வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் டெஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்படும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175/- கட்டணம் ஆகும். https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்னப்பிக்க வரும் 19.02.2026. கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினைபடிக்க: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-01/Advertisement-IT-Regular-30-01-2026-29-32.pdf
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications