பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை.. 2,482 பணியிடங்கள்.. மாதம் ரூ.85,920 சம்பளம்.. டிகிரி தகுதி தான்
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank of Baroda) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுக்க மொத்தம் 2,482 லோக்கல் ஆபிசர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்து இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. வதோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு பொதுத்துறை வங்கி என்பதால், வங்கி வேலைக்காக தயாராகி வரும் தேர்வர்களுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ் ஆக பார்க்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்னப்பிக்கலாம் என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்:
நாடு முழுக்க மொத்த 2,482 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது. மாநில வாரியாக,
தமிழ்நாடு - 132 பணியிடங்கள்
ஆந்திரப் பிரதேசம் - 80
அருணாச்சலப் பிரதேசம் - 20
அஸ்ஸாம் - 40
கோவா - 21
குஜராத் - 1185
ஜம்மு & காஷ்மீர் - 15
கர்நாடகா - 418
கேரளா - 49
மகாராஷ்டிரா - 218
மணிப்பூர் - 15
மேகாலயா - 15
மிசோரம் - 15
நாகாலாந்து - 15
ஒடிசா - 100
பஞ்சாப் - 34
சிக்கிம் - 10
தெலுங்கானா - 50
திரிபுரா - 08
மேற்கு வங்கம் - 42
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி தெரிந்து இருப்பது கட்டாயம். தமிழ்நாட்டில் உள்ள 134 பணியிடங்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினராக இருந்தால் 5 ஆண்டுகளு,ம் ஓபிசி பிரிவினராக இருந்தால் 3 ஆண்டுகளும் சலுகைகள் தரப்படும்.
சம்பளம் எவ்வளவு:
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆன்லைன் டெஸ்ட் / மல்டிபிள் ரவுண்ட்ஸ் டெஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்:
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில்,
சென்னை
மதுரை
திருநெல்வேலி
சேலம்
கோவை
திருச்சி
வேலூர்
விருதுநகர்
தஞ்சாவூர்
கடலூர்
கன்னியாகுமரி/நாகர்கோவில்
நாமக்கல்
விண்ணப்ப கட்டணம்
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்த்தை பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ.850 என்றும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 என்றும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf


Click it and Unblock the Notifications
