Bank of Baroda: மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. 418 அதிகாரி பணியிடங்கள்.. ஒரு நாள் தான் டைம் இருக்கு!
சென்னை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank of Baroda), சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 418 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது. நேரடியாகவும், ஐபிபிஎஸ் வழியாகவும் இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 418 பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
தகவல் தொழில்நுட்பத் துறையில் மொத்தம் 418 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிரந்தர பணியிடம் ஆகும்.
* மூத்த மேலாளர் (JAVA, MMG/S-III) - 28 இடங்கள்,
* மேலாளர் ( JAVA, MMG/S-II) - 27 இடங்கள்,
* அதிகாரி (JAVA, JMG/S-I) - 03 இடங்கள்,
* அதிகாரி (கிளவுட் இன்ஜினியர், JMG/S-I) - 11 இடங்கள்,
* மேலாளர் (கிளவுட் இன்ஜினியர், MMG/S-II) - 24 இடங்கள்,
* அதிகாரி (AI இன்ஜினியர் - AI/GenAI/NLP/ML, JMG/S-I) - 04 இடங்கள்,
* மேலாளர் (AI இன்ஜினியர், MMG/S-II) - 23 இடங்கள்,
* மூத்த மேலாளர் (AI இன்ஜினியர், MMG/S-III) - 12 இடங்கள்,
கல்வித் தகுதி
கல்வித் தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன. பி.இ, பிடெக், எம்பிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனுடன் தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்ள நிபுணர்களுக்கான பல்வேறு பதவிகளுக்குத் தேவையான பட்டப்படிப்புகள் மற்றும் அனுபவங்கள் கோரப்பட்டுள்ளது. எனவே தேர்வு அறிவிப்பை கவனமாகப் படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
19.02.2026 அன்று தேதியின்படி வயது வரம்பானது கணக்கிடப்படும்.
* JMG/S-I அளவிலான (அதிகாரி) பதவிகளுக்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* MMG/S-II அளவிலான (மேலாளர்) பதவிகளுக்கு குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபட்சம் 34 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.
* MMG/S-III அளவிலான (மூத்த மேலாளர்) பதவிகளுக்கு குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 37 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி (PwBD) விண்ணப்பதாரர்களில் பொது/EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு
* MMG/S - I பிரிவில் தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதந்தோறும் ரூபாய் 48,480 முதல் ரூபாய் 85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
* MMG/S - II பிரிவினருக்கு ரூபாய் 64,820 முதல் ரூபாய் 93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.
* MMG/S - III பிரிவினருக்கு ரூபாய் 85,920 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை எப்படி?
ஆன்லைன் தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து நேர்காணல் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
நாளை தான் கடைசி
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும். பெண்கள், SC, ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி (PwBD) விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 175 விண்ணப்ப கட்டணமாகும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூபாய் 850/- கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 19.02.2026 ஆகும். நாளை தான் கடைசி என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-01/Advertisement-IT-Regular-30-01-2026-29-32.pdf












Click it and Unblock the Notifications