பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை.. டிகிரி தகுதி தான்.. மாதம் 1.23 லட்சம் சம்பளம்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் உள்பட 86 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.93 ஆயிரம் முதல் 1.23 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது இந்த வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:
* மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 04 பணியிடங்கள்
* மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 38 பணியிடங்கள்
* தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 01 பணியிடம்
* மூத்த மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 36 பணியிடங்கள்
* தலைமை மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 07 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நிதியியல் (Finance) துறையில் முதுநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். CA, CMA, CS அல்லது CFA தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பணியனுபவமும் அவசியமாகும்.
வயது வரம்பு:
* மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 25 முதல் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 28 முதல் 35 வயது வரை.
* தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 32 முதல் 42 வயது வரை
* மூத்த மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 28 முதல் 35 வயது வரை.
* தலைமை மேலாளர் - C & IC ரிலேஷன்ஷிப் - 32 முதல் 42 வயது வரை
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை, OBC (NCL) பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் வரை, மாற்றுத்திறனாளிகள் (PwD - பொதுப் பிரிவு): 10 ஆண்டுகள், (PwD - OBC): 13 ஆண்டுகள், (PwD - SC/ST): 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 06.07.2026 அன்றைய தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* MMG/S - II: ரூ. 64,820 - ரூ. 93,960/-
* SMG/S-IV: ரூ. 85,920 - ரூ. 1,05,280/-
* SMG/S-IV: ரூ. 102,300 - ரூ. 120,940/-
தேர்வு முறை
குறுகிய பட்டியல் (Shortlisting) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோர் இந்தியா முழுவதும் உள்ள வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.175 ஆகவும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 16.06.2026 முதல் 06.07.2026 வரையிலான தேதிகளுக்குள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://bankofbaroda.bank.in/) வழங்கப்பட்டுள்ள 'Careers' பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 06.07.2026 ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறையானது 16.06.2026 அன்று தொடங்குகிறது.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-06/Advertisement-16-22.pdf















Click it and Unblock the Notifications