Bank Job: பொதுத்துறை வங்கி.. பேங்க் ஆப் இந்தியாவில் வேலை! 400 பணியிடங்கள்.. டிகிரி முடிச்சவங்களா நீங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 400 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் இந்தியா. 1906 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த வங்கி 1969 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன.

பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை
நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வங்கியில் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்கள் ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வழியாக நிரப்பப்படுகிறது.
அதுபோக சில பணியிடங்களை வங்கியே நேரடியாக அறிவிப்பு வெளியிட்டும் நிரப்பி வருகிறது. அதேபோல அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் வின்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
நாடு முழுவதும் மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அஸ்ஸாம் 10, பீகார் 25, கோவா 05, குஜராத் 50, ஜார்க்கண்ட் 45, கர்நாடகா 25, கேரளா 05, மத்தியப் பிரதேசம் 65, மகாராஷ்டிரா 60, டெல்லி 10, ஒடிசா 15, பஞ்சாப் 05, ராஜஸ்தான் 10, தமிழ்நாடு 05, திரிபுரா 20, உத்தரகாண்ட் 05 மற்றும் மேற்கு வங்கம் 40 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை, 01.12.2025 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், அவர்களின் பட்டப்படிப்பு 01.04.2021 முதல் 01.12.2025 வரையிலான காலகட்டத்திற்குள் முடிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன?
* 01.12.2025 நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் 02.12.1997-க்கும் 01.12.2005-க்கும் (இரு தேதிகளும் உட்பட) இடையில் பிறந்திருக்க வேண்டும்.
* பட்டியல் சமூகத்தினர் (SC/ST) 5 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
* மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு (PwBD): பொது/EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகள் என வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வு, அதன்பின்னர் ஆவண சரிபார்ப்பு/நேர்காணல் நடைபெறும். ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை பொது / நிதி விழிப்புணர்வு (General / Financial Awareness), ஆங்கில மொழி (English Language), கணித மற்றும் பகுத்தறிவுத் திறன் (Quantitative & Reasoning Aptitude), மற்றும் கணினி அறிவு (Computer Knowledge) ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 25 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
* ஆன்லைன் மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
* மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு (PWD) ரூ. 400
* பட்டியல் சமூகத்தினர் (ST/SC) மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 600
* மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 800.
எப்படி விண்ணப்பிப்பது?
* ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofindia.bank.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் டிசம்பர் 25. 2025 ஆகும்
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள் ஜனவரி 10, 2026 ஆகும்.
* விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை முழுமையாகப் படித்து தங்கள் தனிப்பட்ட தகுதியை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://bankofindia.bank.in/documents/20121/26765626/Webnotice_2025-26-2_Notice_ENG.pdf/












Click it and Unblock the Notifications