பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது எப்படி போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் இந்தியா உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. சுமார் 5 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

job chennai employment

பேங்க் ஆஃப் இந்தியா

இந்த வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

தலைமை மேலாளர் - ஐடி (பயன்பாட்டு பராமரிப்பு மற்றும் நிர்வாகம்) - 01
தலைமை மேலாளர் - ஐடி (கிளவுட் செயல்பாடுகள்) - 02
தலைமை மேலாளர் - ஐடி ( incident மேலாளர்) - 01
தலைமை மேலாளர் - ஐடி (நெட்வொர்க்) - 02
தலைமை மேலாளர் - ஐடி (டேட்டாபேஸ் நிர்வாகி) - 02
தலைமை மேலாளர் - ஐடி (இன்ஃப்ரா) - 02
தலைமை மேலாளர் - ஐடி (டிஜிட்டல் Payments) - 02
தலைமை மேலாளர் - CISA/CISM/CISSP உடன் ஐடி அதிகாரி - 01

சீனியர் மேலாளர் - ஐடி (நெட்வொர்க் பாதுகாப்பு/நெட்வொர்க் செயல்பாடு) - 05
சீனியர் மேலாளர் - திட்ட மேலாளர் MMGS-III - 03
சீனியர் மேலாளர் - ஐடி (பயன்பாட்டு பராமரிப்பு மற்றும் நிர்வாகம்) - 02
சீனியர் மேலாளர் - ஐடி (கிளவுட் செயல்பாடுகள்) - 01
சீனியர் மேலாளர் - ஐடி (தரக் கட்டுப்பாடு) - 01

சீனியர் மேலாளர் - ETL டெவலப்பர் இன்ஃபர்மேடிகா/ ஸ்பார்க் - 01
சீனியர் மேலாளர் - API டெவலப்பர் - 01
சீனியர் மேலாளர் - ஐடி - பாதுகாப்பு செல் - 02
என மொத்தம் 63 வகையான பணியிடங்களில் 115 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். துறைசார்ந்த பிரிவில் பி இ / பிடெக், எம்.சி.ஏ, எம்.எஸ்.சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல அனுபவமும் அவசியம். பணியிடங்கள், கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் முழு விவரங்களை அதில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு & சம்பளம்

சீனியர் மேனேஜ்மேண்ட் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1,20,940- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். அதிகபட்சமாக 47 வயது வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு முறை,

ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 30.11.2025 - கடைசி நாளாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bankofindia.bank.in/documents/20121/24065467/FINAL%20NOTICE%20-%20SPECIALIST%20OFFICER%202024-25-05%20NOTICE%20DATE%2001.10.2025.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+