அரசு வங்கியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலை.. பிஇ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாட்டிலுள்ள மிக முக்கிய பொதுத்துறை வங்களில் ஒன்று யூனியன் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள யூனியன் வங்கி, சர்வதேச அளவிலும் சீனா, அபுதாபி நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது.
12 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டில் 5ஆவது மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக யூனியன் வங்கி உள்ளது. இந்நிலையில், இங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பை வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 25
பணி வாரியாக
Senior Manager(Digital) - 01 காலியிடம்
Manager(Digital) - 01 காலியிடம்
Manager-Data Scientist - 02 காலிடங்கள்
Manager-Data Analyst - 02 காலிடங்கள்
Manager Statistician - 02 காலிடங்கள்
Manager Detabase Administrator - 01 காலியிடம்
Senior Manager (Economist) - 02 காலிடங்கள்
Manager(Economist) - 02 காலிடங்கள்
Senior Manager (Industry Research) - 02 காலிடங்கள்
Manager (Industry Research) - 02 காலிடங்கள்
Senior Manager(API) - 02 காலிடங்கள்
Manager (API) - 02 காலிடங்கள்
Senior Manager(Digital Lending & Fintech) - 02 காலிடங்கள்
Manager (Digital Lending & Fin-tech) - 02 காலிடங்கள்
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு கல்வி தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.. அதேநேரம் பெரும்பாலான பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: Senior Managers பணியிடத்திற்கு 40 வயதானவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு 35 வயதானவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஜனவரி 7, 2022
விண்ணப்பிக்கக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150. இதர பிரிவிருக்கு ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.unionbankofindia.co.in/pdf/Notification%20for%20Recruitment%20of%20Specialist%20Officers,%20Domain%20Experts%20on%20Contractual%20Basis.pdf
விண்ணப்பிக்க
https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx












Click it and Unblock the Notifications