ரூ.90,000 வரை சம்பளம்! மிஸ் பண்ணாதீங்க.. சென்னை ‛பெல்’ யூனிட்டில் சூப்பர் வேலை! தேதி முடியப்போகுது
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெல் எனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை யூனிட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். குறைந்தபட்சமாக மாதம் ரூ.21,500 முதல் அதிகபட்சமாக ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெல் எனும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
இந்நிலையில் தான் பெல் நிறுவனத்தின் சென்னை யூனிட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 3 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. அதன் விபரம் வருமாறு:
என்ஜினீயரிங் அசிஸ்டென்ட்: பெல் நிறுவனத்தின் சென்னை யூனிட்டில் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (டிரெய்னி) பணி மெக்கானிக்கல் பிரிவில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ பிரிவில் தொடர்புடைய துறையில் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னீசியன் சி: டெக்னீசியன் - சி பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் பிரிவுக்கு 4 பேரும், பிட்டர் பிரிவுக்கு 6 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்து குறிப்பிட்ட பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து ஓராண்டு அப்ரன்டீஸ் பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் வகுப்பு முடித்து 3 ஆண்டுக்கான தேசிய அப்ரென்டீஸ் சான்று வைத்திருக்க வேண்டும்.
கிளர்க் & கம்ப்யூட்டர் ஆபரேட்டர்: கிளர்க் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் பிகாம் அல்லது பிபிஎம் படிப்பை முடித்திருப்பதோடு கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டு்ம. ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாதசம்பளம்: என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.24,500ம் அதிகபட்சமாக ரூ.90,000 வரையும் சம்பளம் வழங்கப்படும். இருப்பினும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 6 மாதம் பயிற்சி காலமாக கருதப்படும். இந்த சமயத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக மட்டும் வழங்கப்படும். இந்த பயிற்சியை முடித்த பிறகு மேற்கூறிய மாதசம்பளம் குறிப்பிட்ட பணிகளுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: அதேவேளையில் டெக்னீசியன் ‛சி' மற்றும் கிளர்க் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சி பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.21,500ம் அதிகபட்சமாக ரூ.82,000ம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 8 ம் தேதிக்குள் https://bel-india.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.295 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் என்பது பொது, இடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, Trade test (Practical/Skill Test) முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications