ரஷ்ய ராணுவ வீரரை தூக்கி வீசிய இயந்திர துப்பாக்கி.. நூலிழையில் தப்பிய வீரர்.. ஷாக் வீடியோ பாருங்க
மாஸ்கோ: போர் பயிற்சியின்போது அதிநவீன ஹெலிகாப்டர் மெஷின் துப்பாக்கியை வைத்து ராணுவ வீரர் சுட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வீரரை ஹெலிகாப்டர் மெஷின் துப்பாக்கி தூக்கி வீசியது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. இந்த போர் 4 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகை மேற்கொள்ள ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்யாவிடம் பல்வேறு வகையான அதிநவீன ராணுவ ஆயுதங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் YakB -12.7 எனும் ஹெலிகாப்டர் மெஷின் கன் (YakB -12.7 Helicopter Machine Gun). இந்த ஹெலிகாப்டர் மெஷின் கன் என்பது 360 என்ற அளவில் ரோட்டேட் செய்து எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து சுடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்த மெஷின் கன்னை வைத்து 2 ரஷ்ய ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு வீரர் மெஷின் கன்னை இயக்கினார். இன்னொருவர் பக்கத்தில் நின்றார். மெஷின் கன் சுழன்றபோது அதனை கையில் பிடித்திருந்த ராணுவ வீரர் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் மெஷின் கன் அவரை தூக்கி வீசியது. அதோடு மெஷின் கன் தொடர்ந்து சுட்டது. இந்த சமயத்தில் அவர் அருகே இருந்த இன்னொரு வீரர் நொடியில் தலையை குனிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
𝐕𝐢𝐫𝐚𝐥 𝐅𝐨𝐨𝐭𝐚𝐠𝐞: A Russian military training exercise reportedly went awry after troops mounted a YakB-12.7 helicopter machine gun on a fixed stand, with the weapon appearing to spin out of control during the drill.#Russia#RussianArmy#MilitaryTraining#YakB127 pic.twitter.com/rwwpVsx9K0
— Daily Kishtwar Times (@kishtwartimes1) July 12, 2026
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இடம்பெற்ற மெஷின் கன் 4 பேரல் கொண்ட 12.7 எம்எம் ரோட்டரி மெஷின் கன் ஆகும். இது ரஷ்யாவின் Anti Aircraft Gun என அழைக்கப்படுகிறது. அதாவது ரஷ்யாவின் போர் ஹெலிகாப்டர்களில் இது பொருத்தப்பட்டு எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி வல்லுநர்கள் சில கருத்துகளை கூறியுள்ளனர். அதாவது 'YakB-12.7' ரக ஹெலிகாப்டர் மெஷின் கன் பொதுவாக 'Mil Mi-24 Hind' போன்ற ரஷ்யாவின் போர் ஹெலிகாப்டர்களில் வான்வழித் தாக்குதலுக்காக தான் பயன்படுத்தப்படும். இதனை தற்போது ராணு வீரர்கள் இயக்கி உள்ளனர். இதனால் அந்த மெஷின் கன்னின் வேகத்திற்கு ராணு வீரரால் ஈடுகொடுக்க முடியாமல் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் தற்போதைய இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது? இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர்? உயிரிழந்தனர்? என்பது பற்றிய தகவல் உடனடியாக வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications