சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவுக்கு ராகுலிடம் இருந்து அழைப்பு வந்ததா? ஸ்டாலின் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுயசரிதை புத்தகம் வெளியிட்ட சோனியா காந்திக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனக்கு எந்த அழைப்பிதழும் வரவில்லை என்று கூறிய ஸ்டாலின், தன்னுடைய உதவியாளருக்கு செல்ஃபோனில் அழைத்து அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் விஜய், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால் திமுகவில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.

Stalin

இதனிடையே சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியிடம் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்தது. ஸ்டாலினை தொடர்பு கொள்ள முயன்ற போது, ராகுல் காந்தியிடம் பேசவில்லை என்று சொல்லப்பட்டது. இருப்பினும் சோனியா காந்திக்கு ஸ்டாலின் தரப்பில் வாழ்த்து கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி அழைப்பு விடுக்க முயன்ற போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் இருப்பதாக கூறி தொலைபேசி அழைப்பை ஸ்டாலின் ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சி தரப்பில் எந்த நிர்வாகியும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஸ்டாலினிடம் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் மவுனமாக இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், காவிரி விவகாரம் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றால், அவருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதுவரை விஜய் என்ன பேசி இருக்கிறார்.. என்ன பேசி இருக்கிறார்..

சோனியா காந்தி சுயசரிசை புத்தக வெளியீடு தொடர்பாக அழைப்பிதழ் வரவில்லை.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்துள்ளனர்.. அதன் அடிப்படையில் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதினேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக திமுக உடனான உறவை காங்கிரஸ் கட்சி தொடர விரும்புவதாக தெரிகிறது.

ஆனால் காங்கிரஸ் உடனான உறவை திமுக தொடர விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சோனியா காந்தி மீது மரியாதை வைத்திருந்தாலும், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மீது திமுக அதிருப்தியில் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+