திமுகவின் பெரிய திமிங்கலம்.. துரைமுருகனை நெருக்கும் விஜய்? பழைய கேஸை தூசு தட்டி எடுத்ததன் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மீது 1427 கோடி ஆற்று மணல் முறைகேடு தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. மாஜி துரைமுருகன் உள்ளிட்ட 28 பேரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் என்னென்ன தகவல்கள் குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளது? வழக்கின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் பலர் குறி வைக்கப்படுகின்றனர். ஏற்கனவே எவ வேலு, கேஎன் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய குற்றச்சாட்டில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அடுத்த அதிரடியாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Duraimurugan

துரைமுருகன்

அதாவது தமிழகத்தில் 1427 கோடி ரூபாய்க்கு ஆற்று மணல் முறைகேடு வழக்கில் தான் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், முன்னாள் தலைமை பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி ஆகியோர் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.

எஃப்ஐஆர் பதிவு

பின்னர் 28 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சதித்திட்டம், நம்பிக்கை மோசடி, ஆவண மோசடி, திருட்டு சதி ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1957ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1988 ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

427 கோடி மணல் ஊழல்

மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தங்கள் விதிமுறைப்படி திறந்தவெளி டெண்டர் மூலம் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக 'லிமிடெட் டெண்டர்' வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த இடம் ஆழம் மற்றும் ஒப்பந்த எல்லைகளை தாண்டி அதிக மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். மணல் எடுத்துச் செல்வதற்கான அனுமதி சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டு அவை உண்மையானவை போல அரசு பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மணல் விற்பனை

சட்ட விரோத மணல் தனியார் டிப்போக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த தொகை தனியார் வங்கி கணக்கு செலுத்தப்பட்டு முறையான பணிவார்த்தனைகள் போல காட்டப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அமலாக்கத்துறை

சரி இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழக வெற்றிக்காக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டவைய என்றால் அதுதான் இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் அடுத்தடுத்து அமைச்சர்களை குறித்து அமலாக்கத் துறையும் வருமானவரித்துறையும் சோதனைகள் நடத்தி வந்தது. அப்படித்தான் தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் 2024 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

பண மோசடி தடுப்புச் சட்டம்

மணல் குவாரிகள், அரசு அலுவலகங்கள், அமைச்சரின் வீடு மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. ஜூன் 13ஆம் தேதி 28 மணல் குவாரிகளில் சட்டவிராத மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றினை அளித்தது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

விஜய் அரசு

இதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் 18 அரசு ஊழியர்கள் மற்றும் 10 தனி நபர்கள் ஒப்பந்ததாரர்கள் என 28 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். தற்போது அந்த வழக்கை தான் விஜய் அரசு தூசு தட்டி சாரணையை துரிதப்படுத்தி இருக்கிறது என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+