அழைக்கும் பெல்! ரூ.21,500 டூ ரூ.90,000 வரை ஊதியம்! டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ படித்தவர்களுக்கு ஜாக்பாட்
பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பெல் எனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறத. இங்கு மாத சம்பளம் ரூ.21,500 முதல் ரூ.90 ஆயிரத்தில் 3 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
அசிஸ்டென்ட் டிரெய்னி: பெல் நிறுவனத்தில் தற்போது என்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (EAT) பிரிவில் மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10 பேரும் சிவில் பிரிவில் 6 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
டெக்னீசியன் ‛சி': டெக்னீசியன் ‛சி' பிரிவில் மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி எலக்ட்ரானிக் மெக்கானிக்கல் பிரிவில் 27 பேர், பிட்டர் பிரிவில் 12 பேர், எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 பேர் டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) பிரிவில் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு எஸ்எஸ்எல்சி + ஐடிஐ படிப்பு முடித்து ஒரு ஆண்டு அப்ரென்டீஸ் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்எஸ்எல்சியுடன் குறிப்பிட்ட பிரிவில் 3 ஆண்டுக்கான தேசிய அப்ரென்டீஸ் சான்று படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் அசிஸ்டென்ட்: ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிகாம் அல்லது பிபிஎம் 3 ஆண்டு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: என்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி பணிக்கு குறைந்தபட்சமாக ரூ.24,500ம், அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்படும். இருப்பினும் முதல் 10 மாதம் பயிற்சி காலம் என்பதால் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். மாறாக டெக்னீசியன் ‛சி' மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.21,500ம் அதிகபட்சமாக ரூ.82 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த 3 பிரிவுகளுக்கான பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.bel-india.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய செப்டம்பர் மாதம் 5ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் விண்ணப்ப கட்டணமாக 18 சதவீத ஜிஎஸ்டியுடன் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு எழுத்து தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பபடுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications