மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம்.. பெல் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி என்ஜினீயர் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. இந்நிலையில் தான் பெல் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பொதுப்பிரிவில் 18 பேர், இடபிள்யூஎஸ்-ல் 4 பேர், ஓபிசியில் 13 பேர், எஸ்சி பிரிவில் 8 பேர், எஸ்டி பிரிவில் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: இந்த பணி என்பது தற்காலிகமானது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ஜினீயரிங், இன்பர்மேன் சயின்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பொது, ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவினர் என்றால் இந்த படிப்புகளை 55 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் பாஸ் செய்திருந்தால் போதும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளம் மூலம் மார்ச் மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு கட்டணமாக ரூ.177 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை.
விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், டெல்லி, காசியாபாத், விசாகப்பட்டினம், மும்பை, இந்தூர், கொல்கத்தா, கொச்சியில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications