மாதம் ரூ.90,000 வரை ஊதியம்! பெல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ21,500 முதல் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
காலியிடங்கள்: பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 7 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (எலக்ட்ரீக்கல்) பணிக்கு 3 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (மெக்கானிக்கல்) பணிக்கு 12 பேர், டெக்னீசியன்-சி(எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்) பணிக்கு 12 பேர், டெக்னீசியன்-சி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு 2 பேர், டெக்னீசியன் - சி (பிட்டர்) பணிக்கு 10 பேர் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (எலக்ட்ரீக்கல்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பையும், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி (மெக்கானிக்கல்) பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
மேலும் டெக்னீசியன்-சி(எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்) பணிக்கு 10ம் வகுப்பு +ஐடிஐ + ஓராண்டு எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் டிரேட் அப்ரன்டீஸ்ஷிப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன்-சி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு ஐடிஐ முடித்து ஓராண்டு எலக்ட்ரிக்கல் டிரேட் அப்ரண்டீஸ்ஷிப் பயிற்சியும், டெக்னீசியன் - சி (பிட்டர்) பணிக்கு ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ்ஷிப் ஓராண்டு பிட்டர் டிரேட் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி, டெக்னீசியன் - சி பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
மாத சம்பளம்: என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.24,500 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன்- சி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,500 முதல் ரூ.82,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுதவிர அலோவன்ஸ் தொகையும் தனியே வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.295 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள பெல் நிறுவனத்தில் பணி வழங்கப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications