பெல் நிறுவனத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்.. 232 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 232 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம். நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 236 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூர், காசியாபாத் புனே, தெலுங்கானா, சென்னை, மசிலிபட்டினம், பஞ்சகுலா, கோட்வரா மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். பெல் நிறுவனத்தின் அறிவிப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

பணி விவரம்: பிராபேஷனரி என்ஜினீயர் (Electronics and Communication) -124 பணியிடங்கள்.
பிராபேஷனரரி என்ஜீனியர் (மெக்கானிக்கல்) -18 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் -18 இடங்களும், மனித வள மேம்பாடு -12 பணியிடங்களும், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் (பைனான்ஸ்) -15 பணியிடங்களும் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து என்ஜினீயரிங் படித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த படிப்புகள் கேட்கப்பட்டுள்ளன. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல்1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். கணிணி வழி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் போதுமான கல்வி தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84142/Index.html என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரகளுக்கான பயிற்சி காலம் உள்ளிட்ட நிபந்தனைகளை தேர்வு அறிவிப்பில் கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 28.10.2023 ஆகும். தேர்வு குறித்த அறிவிப்பை தெரிந்து கொள்ள https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf கிளிக் செய்யவும்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications