Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? மாதஊதியம் ரூ.50,000.. பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை! தமிழகத்திலும் பணி செய்யவும் வாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெல் நிறுவன பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலும் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பெல் (BEL or Bharat Electronics Limited) நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்புத்துறைியன் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்/ BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட 250க்கும் அதிகமான பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

பெல் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் -I என்ற பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கேரளா மாநிலம் கொச்சி, கேவா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, போர்ட் பிளேயர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 01.03.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூபிடி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது என்ஜினீயரிங் கல்லூரியில் பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தாரர்கள் பிஇ, பிடெக்கில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன் அல்லது டெலி கம்யூனிகேஷன் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் படித்து முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் பாஸ் மட்டும் ஆகியிருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

மாத ஊதியம் எவ்வளவு?

மாத ஊதியம் எவ்வளவு?

இது ஒப்பந்த பணியாகும். இதனால் ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு முதல் ஆண்டு ரூ.40,000, 2வது ஆண்டு ரூ.45,000, 3வது ஆண்டு ரூ.50,000 வழங்கப்படும். மேலும் யாராவது 3 ஆண்டு பெல் நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணி அனுபவம் கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பம் செய்தால் அவர்கள் ப்ராஜெக்ட் என்ஜினீயர் II என்ற அடிப்படையில் முதல் ஆண்டு ரூ.45 ஆயிரம், 2வது ஆண்டில் ரூ.50 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.55 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்வது எப்படி?

தேர்வு செய்வது எப்படி?

ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.400 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 மார்ச் 25ம் தேதிக்குள் https://www.bel-india.in/ எனும் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை Sr.Gen. Manager (HR/Military Communications & MR), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru 560013 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் மீது Application for the post of Project Engineer/Mil Com SBU என குறிப்பிட்டு உரிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+