Part time Job: சாப்ட்வேர் டெஸ்ட்டிங் உள்பட 5 பிரிவுகளில் காலியிடங்கள்.. அழைக்கும் சென்னை நிறுவனம்
சென்னை: சென்னை சிறுசேரியில் செயல்பட்டு வரும் பெசன்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் பார்ட்டைம் மற்றும் ஃபுல் டைம் முறையில் 5 பிரிவுகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
சென்னை சிறுசேரியில் பெசன்ட் டெக்னாலஜிஸ் (Besant Technologies) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சாப்ட்வேர் துறையில் கால்பதிக்க விரும்பும் நபர்களுக்கு தேவையான படிப்புகளை கற்று கொடுத்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் டீச்சிங் ஃபீல்ட் மற்றும் மென்டாரிங் பிரிவுகளில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த நிறுவனத்தில் இருந்து 5 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெஸ்ட்டிங், கிளவுட் கம்ப்யூட்டிங்,டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், ஏஐ மற்றும் எம்எல் வித் டேட்டா அனலிட்டிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடி துறையில் 3 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
இதில் ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் பணியை எடுத்து கொண்டால் ஆங்குலர்/ரியாக்ட்,ஜாவா, பைத்தான், .நெட், எஸ்க்யூஎல்/மைஎஸ்க்யூஎல் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெஸ்ட்டிங்கை எடுத்து கொண்டால் செலினியம், மேனுவல் தெரிந்திருக்க வேண்டும். கிளவுட் கம்யூட்டிங் என்றால் ஏடபிள்யூஎஸ், டெவ்ஓபிஎஸ், லினக்ஸ், சிசிஎன்ஏ தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் டேட்டா அனலிட்டிக்ஸ் என்றால் பைத்தான், Tableau, Power BI, எக்ஸல், எஸ்க்யூஎல் தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சிருசேரியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். பார்ட் டைம் மற்றும் முழுநேரம் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் பணி செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி, திறமை, அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
அதேபோல் முழுநேரம் மற்றும் பார்ட்டைம் வேலை செய்யும் நடைமுறை உள்ளதால் இருதரப்புக்கும் சம்பளம் வேறுபடும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications