நோ எக்ஸாம்.. மாதம் ரூ.39,000 சம்பளம்.. என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் வேலை! அழைக்கும் பிடிஎல்!
பெங்களூர்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிடிஎல்லில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு இன்றி இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் மாதம் குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.39 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் பிடிஎல் எனும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் இந்திய பாதுகாப்புக்கு துறைக்கு தேவையான லாஞ்சர்கள், நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள் உள்பட பலவற்றை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் பெங்களூர் நியூ திப்பசந்திராவில் உள்ள சுராஞ்சன் தாஸ் ரோட்டில் உள்ள ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள பிடிஎல் ப்ராஜக்ட் அலுவலகத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு மொத்தம் 34 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பணிக்கு 7 பேரும், ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்) பணிக்கு 27 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் ப்ராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், பிஎஸ்சி என்ஜினீயரிங், எம்இ, எம்டெக் படிப்புகளை மெக்கானிக்கல், இன்டஸ்ட்ரீயல் மற்றும் ப்ரோடக்சன், மெக்கானிக்கல் ப்ரோடக்சன் மற்றும் டூல், ப்ராடக்சன், ப்ராடக்சன் டெக்னாலஜி மேனுபேக்சரிங், ப்ராடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங் டெக்னாலஜி, ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். அதோடு ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் டிசைன் மற்றும் டெக்னாலஜி, அப்ளைட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கண்ட்ரோல் என்ஜினீயரிங், எலக்டரிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரரிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் அன்ட் கன்ட்ரோல் என்ஜினீயரிங் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 5 முதல் 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். மேலும் தற்போது வெளியாகி உள்ள இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது. தேர்வாகும் நபர்கள் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி முதலாமாண்டில் மாதம் ரூ.30 ஆயிரம், 2ம் ஆண்டில் ரூ.33 ஆயிரம், 3ம் ஆண்டில் ரூ.36 ஆயிரம், 4ம் ஆண்டில் ரூ.39 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.bdl-india.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் பூர்த்தி செய்து அட்டெஸ்ட் வைக்கப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். ப்ராஜெக்ட் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பணிக்கான நேர்க்காணல் என்பது செப்டம்பர் மாதம் 16ம் தேதி காலை 8.30 மணிக்கும், ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல்) பணிக்கான நேர்க்காணல் என்பது செப்டம்பர் மாதம் 17 ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நேர்க்காணல் என்பது Aeronautical Society of India, Surajan Das Road, Opposite Engine Division, Bina Mangala, New Tippasandra, Bengaluru, Karnataka - 560 075 (Land Mark: Near Vivekananda Metro Station) என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications