பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. டிப்ளமோ,பிஇ எது படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்..தவற விடாதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer மற்றும் supervisor பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் அதிகளவில் மின் உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம். மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகம் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்

இந்த பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer மற்றும் supervisor பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BHEL company latest jobs recruitment announcement for Engineering graduates

மொத்த காலியிடங்கள் - 22

பணி வாரியாக:

Engineer 7

supervisor 15

கல்வித் தகுதி: Engineer பணியிடத்திற்கு சிவில் பாடப்பிரிவில் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும். அல்லது சிவில் பிரிவில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

supervisor சிவில் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பவம் - ரூ 39 ஆயிரம் முதல் ரூ 71 ஆயிரம் வரை

வயது வரம்பு: 34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசின் விதிகளின்படி ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை -நேர்முகத் தேர்வு. மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு ரூ 200

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 24, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf

விண்ணப்பிக்க

https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/home.jsp

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+