BHEL jobs: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை! திருச்சியிலேயே பணியிடம்.. எக்ஸாம் கிடையாது! யார் யார் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 530 அப்ரெண்ட்சீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எதுவும் கிடையாது. மெரிட் லிஸ்ட் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,300 வரை சம்பளம் வழங்கப்படும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் திருச்சி பிரிவில், 530 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சியிலேயே பணியமர்த்தப்படுவர். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

BHEL jobs 530 Apprentice posts for ITI Diploma and Degree Holders how to apply details here

காலிப்பணியிடங்கள்

ஐடிஐ முடித்தவர்கள்: ஃபிட்டர் - 125, வெல்டர் - 115, எலக்ட்ரீஷியன் - 30, டர்னர் - 20, மெஷினிஸ்ட் - 20, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் -7, மோட்டார் மெக்கானிக் - 12 என மொத்தம் ஐடிஐ முடித்தவர்களுக்கு என்று 380 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

டிப்ளமோ முடித்தவர்கள்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 40, கம்ப்யூட்டர் என்ஜினியரிங் - 6, சிவில் என்ஜினியரிங் - 5, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் - 3, எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 5 என மொத்தம் டிப்ளமோ முடித்தவர்களுக்கு என 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள்: மெக்கானிக்கல் என்ஜினியரிங் 50, சிவில் என்ஜினியரிங் - 8, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 3, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் - 3, எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 3, அக்கவுண்டன்ட் - 13, அசிஸ்டென்ட்- ஹெச் ஆர் என மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி என்ன?

ஐடிஐ பிரிவுக்கு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் NCVT அல்லது SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் முழு நேர ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

டிப்ளமோ பிரிவுக்கு: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2022 முதல் 2026 வரை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள்: 10 மற்றும் +2 முடித்த பிறகு சம்பந்தப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் முழுநேர பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம் படித்தவர்களும், அசிஸ்டென்ட்- ஹெச் ஆர் பணிக்கு பி.ஏ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்:

ஒரு ஆண்டு கால பயிற்சி பணியிடம் தான். நிரந்தர பணியிடம் கிடையாது. தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சியிலேயே பணியிடம். ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினியரிங் அல்லது பிற பட்டப்படிப்பு முடித்துவிட்டு பொதுத்துறை நிறுவனத்தில் தொழில் அனுபவம் பெற விரும்புபவர்களுக்கு இந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு அப்ரெண்டீஸ் பயிற்சி ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

வயது வரம்பு

01.08.2026 அன்று தேதிப்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது 27 ஆண்டுகள் ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி என்றால் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் எனில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

ஐடிஐ அப்ரெண்டீஸ் - ரூ.10,560 முதல் ரூ.11,040 வரை
டிப்ளமோ அப்ரெண்டீஸ் - ரூ.10,900
பட்டதாரி அப்ரெண்டீஸ் - ரூ.12,300

தேர்வு நடைமுறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் கிடையாது. மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி / தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலகாக தகுதியான நபர்கள் கடந்த 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.09.2026 ஆகும்.

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+