மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை.. ராணிப்பேட்டையில் பணியிடம்! வாக் இன் இன்டர்வியூ.. விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுகான பிறகு தகுதிகள் என்னென்ன, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பெல் (Bhel). பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. மின் நிலையங்களுக்கான கொதிகலன், மின் கடத்திகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் பணியில் இந்த பொதுத்துறை நிறுவனம் செயல்படுகிறது.

போபால், ஹரித்வார், ஐதராபாத், ஜான்சி, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெல் நிறுவனத்தில் வழக்கமான பணியிடங்கள் மட்டுமின்றி அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
அப்ரெண்டீஸ்
வெல்டர் - 45
ஃபிட்டர் - 45
எலக்ட்ரீஷியன் - 10
கல்வித் தகுதி:
துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2023, 2024 & 2025 ஆகிய ஆண்டுகளில் ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களை பொறுத்தவரை பயிற்சி பணியிடங்கள் என்பதால் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் அப்ரெண்டீஸ் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
சம்பளம் விவரம்:
மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். சலுகை விலையில் கேண்டீன் உணவுக்கு அனுமதி உண்டு.
தேர்வு முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15 ஆம் தேதி நேரடியாக நேர்முகத்தேர்வு செல்லலாம். Walk-in Interview நடைபெறும் இடம்: "HRM Conference Hall, Admin. Building, BHEL, Ranipet - 632406"
விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
எட்டாம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
ஐடிஐ சான்றிதழ்,
ஆதார் கார்டு,
சாதி சான்றிதழ் (எஸ்.சி/எஸ்.டி/ஒபிசி) ,
மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bap.bhel.com/circulars/Engagement%20of%20Trade%20Apprentive%20Walk%20In%20Interview.pdf












Click it and Unblock the Notifications