வட்டார கல்வி அலுவலர் பதவி! நேரடி நியமனம்.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. சான்சை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: வட்டார கல்வி பதவியில் காலியாக உள்ள 33 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருந்தது. இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கும் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் இதுவரை விண்ணப்பிக்காவிட்டாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தமிழக தொடக்க கல்வி துறையில் கீழ் வரும் வட்டார கல்வி அலுவலர் பதவியில் காலியாக உள்ள 33 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வட்டார அளவில் உள்ள பள்ளிகளை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை கொன்அ இந்த பதவிக்கு விண்ணபிக்க ஏதேனும் ஒரு பட்ட படிப்புடன் பிஎட் முடித்து இருக்க வேன்டும்.

ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமும் நேரடியாக அதாவது போட்டித்தேர்வு மூலாமகவும் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
கடந்த மாதம் 6 ஆம் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நிலையில், கடந்த 5 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பிப்பத்தில் சில சிக்கல்கள் இருப்பதால் விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்று ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.அதன்படி வரும் 12 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு எப்போது?: வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். இதில் கட்டாய தகுதியாக தமிழில் 50 மதிப்பெண் பெற வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?: மாத சம்பளம்: 36,900-1,16,600 வரை
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பங்களை trb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்
தேர்வுக்கட்டணம்: ரூ. 600 செலுத்த வேண்டும். எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300- கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை: பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை படித்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு குறித்த முழு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://trb1.ucanapply.com/apply_now இதில் தெரிந்து கொள்ளலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications