2106 காலிப்பணியிடங்கள்.. அழைக்கும் மத்திய அரசு பணி.. 10 முதல் டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு,
டெல்லி: பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்டில் வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 2106 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கைநிறைய சம்பளத்துடன் இந்த பணியை பெற 10 முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பால் வர்த்தகத்தை அதிகரிக்கும் முனைப்பில் மத்திய அரசு சார்பில்
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் தொடங்கப்பட்டது. இது பல்வேறு தொழில்நுட்ப திறன் சார்ந்த குழுவுடன் செயல்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியை அதிகரித்தல், செயற்கை கருவூட்டலை ஊக்குவித்தல், சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி பால் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் செயல்பட்டு வரும் நிலையில் ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?
பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்டில் மொத்தம் 6 பிரிவுகளில் 2,106 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி டெவலப்மெண்ட் ஆபிசர் பணியிடத்துக்கு 108 பேர், அசிஸ்டெண்ட் டெவலப்மெண்ட் ஆபிசர் பணிக்கு 324 பேர், Animal Attendant பணிக்கு 1620 பேர், Animal Husbandray Advancement Centre Director பணிக்கு 33 பேர், Digital Marketing Executive பணிக்கு 21 பேர் என மொத்தம் 2106 பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளது.

கல்வி தகுதி -வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பணியை பொறுத்து கல்விதகுதி வேறுபடுகிறது. அதன்படி 10, 12 பாஸ் செய்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவரும் பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பத்தாரர்கள் குறைந்தப்பட்சம் 21 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
Development Officer பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படும். Assistant Development Officer பணிக்கு ரூ.22,000, Animal Attendant பணிக்கு ரூ.20,000, Animal Husbandry Advancement Center Director மற்றும் Digital Marketing Executive பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 15,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bharatiyapashupalan.com/ ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 10ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக டெவலப்மெண்ட் ஆபிசர் பணிக்கு ரூ.945, அசிஸ்டெண்ட் டெவலப்மெண்ட் ஆபிசர் பணிக்கு ரூ.828, அனிமல் அன்டென்டென்ட் பணிக்கு ரூ.708, அனில் ஹஸ்பண்ட்ரி அட்வான்மென்ட் மைய இயக்குமர் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு ரூ.591 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications