கைநிறைய சம்பளம்! பிபிஎன்எல்லில் 3,444 காலியிடங்கள்! 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’
டெல்லி: பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 3,444 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 அல்லது 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்தியாவில் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பால் வர்த்தகத்தை அதிகரிக்கும் முனைப்பில் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை அதிகரித்தல், செயற்கை கருவூட்டலை ஊக்குவித்தல், சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி பால் புரட்சியை ஏற்படுத்தும் பணி தான் இதன் நோக்கமாக உள்ளது.

அரசு சார நிறுவனமாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது அதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் சர்வே இன்சார்ஜ்(Survey in Charge) மற்றும் சர்வேயர் ( Surveyor) என மொத்தம் 2 பிரிவுகளில் 3,444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனப்டி சர்வே இன்சார்ஜ் பணிக்கு 574 பேரும், சர்வேயர் பணிக்கு 2,870 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் சர்வேயர் இன்சார்ஜ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பும், சர்வேயர் பணிக்கு 10ம் வகுப்பு ம் முடித்திருக்க வேண்டும். சர்வே இன்சார்ஜ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். சர்வேயர் பணிக்கு மாதசம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி வாரியாக பார்த்தால் சர்வே இன்சார்ஜ் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சர்வேயர் பணிக்கு என்றால் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 5ம் தேதிக்குள் www.bharatiyapashupalan.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். சர்வேயர் பணிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.826 ஆகவும், சர்வேயர் இன்சார்ஜ் பணிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.944 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சந்தேகங்கள் இருப்பின் 0141 - 2202271, 93518 99199 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications