Work From Home.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தால் ரூ.5.8 லட்சம் சம்பளம்! அழைக்கும் ஐடி நிறுவனம்
சென்னை: டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாவர்களை ஐடி நிறுவனம் தேடி வருகிறது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை வழங்குவதுடன் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5.8 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
தற்போதைய சூழலில் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வரவழைத்து வேலை வாங்கி வருகிறது. சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் Work From Home வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் Brewappsn என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் முழுவிவரங்கள் வருமாறு: Brewappsn நிறுவனத்தில் தற்போது ஜுனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் (Junior Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஐடி துறையில் 6 மாதம் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை பணி அனுபவம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில முக்கிய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அதன்படி பிரண்ட்எண்ட் மற்றும் பேக்எண்ட் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், பிரேம்வொர்க்ஸ்களான ரியாக்ட்/ஆங்குலர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் பேக்எண்ட் டெக்னாலஜிகளாக உள்ள Node.js, Python அல்லது ஜாவா தெரிந்திருக்க வேண்டும்.
SQl/NoSQL Databases பற்றிய புரிதல் இருக்க வேண்டும். REST APIs மற்றும் இன்டிகிரேஷன் தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறமை இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.5.8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இந்த சம்பளம் என்பது பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி என்பது முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக Brewappsn நிறுவனத்தின் இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications