BSNL job: பிஎஸ்என்எல் வேலை.. 50 ஆயிரம் சம்பளம்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு யோகம்.. தூள் கிளப்புங்க
சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் (BSNL job) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

BSNL job - பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசு நிறுவனம் என்பதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? என்ற ஆர்வம் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கொடுக்கும். இந்தநிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்ள் விவரம்:
* சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி டெலிகாம்: 95 பணியிடங்கள்
* சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி ஃபைனான்ஸ்: 25 பணியிடங்கள்
என மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் / அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி (ஃபைனான்ஸ்) பணிக்கு சிஏ மற்றும் காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
07.03.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி: ரூ.24,900 - 50,500/-வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.1250/- கட்டணம் ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் - 05.02.2026 ஆகும்.
* விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.03.2026 ஆகும்.
* விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்: 08.03.2026 முதல் 15.03.2026 ஆகும்
* தேர்வு நடைபெறும் நாள் - 29.03.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bsnl.co.in/
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications